நிலையவள்

2020 ஆண்டின் முதலாம் தவணை நாளை ஆரம்பம்

Posted by - January 1, 2020
2020 ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை (02) ஆரம்பமாகவுள்ளது. 2019 ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையின் விடை தாள் திருத்தும் பணிகளின் முதல் கட்டம் கடந்த 26 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி…
மேலும்

மதுபானம் தயாரிப்பதற்காக எத்தனோல் இறக்குமதி செய்ய தடை

Posted by - January 1, 2020
நாட்டினுள் வெளிநாடுகளில் இருந்து எத்தனோல் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் அடிப்படையில் இன்று (01) முதல் மதுபானம் தயாரிப்பதற்காக எத்தனோல் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் எத்தனோல் பாரிய…
மேலும்

ஜனநாயகம் என்ற போர்வையில் நாட்டின் சொத்துக்களை கொள்ளையிட இடமளிக்க முடியாது-விதுர விக்கிரமநாயக்க

Posted by - January 1, 2020
ஜனநாயகம் என்ற போர்வையில் நாட்டில் ஊழல் மோசடிகளை மேற்கொள்ள இடமளிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். ஹொரணை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஜனநாயகம்…
மேலும்

நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை, களுத்துறை பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

Posted by - January 1, 2020
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழை வீழ்ச்சி பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
மேலும்

தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் மீது குற்றச்சாட்டு

Posted by - January 1, 2020
பெருந்தோட்ட பகுதிகளில் வீடுகளையும் ஏனைய கட்டடங்களையும் அமைக்க தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தினால் துரிதமாக ஆய்வறிக்கைகள் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக்க வித்தானகமகே தலைமையில்…
மேலும்

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது

Posted by - January 1, 2020
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (31) பிற்பகல் ​2.05 மணியளவில் பேலியகொடை பாலத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 4 கிராம் 230…
மேலும்

மொட்டுச் சின்னத்தில் போட்டியிட விரும்பம் இல்லாதவர்கள் தனித்து போட்டியிட முடியும்-பிரசன்ன

Posted by - January 1, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கதிரை அல்லது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு எவரினதும் பிடியில் சிக்க நான் தயாராக இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மஹர மற்றும் வத்தளை தொகுதிகளின் உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் இன்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது…
மேலும்

அதிக விலையில் உணவுப் பொதிகளை விற்றால் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை !

Posted by - January 1, 2020
அதிக விலையில் உணவுப் பொதிகள் மற்றும் சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் ஹோட்டல்கள் , உணவகங்களில் உணவுப் பண்டங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருக்கும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் , நாடளாவிய ரீதியில் காணப்படும் உணவகங்களின் தூய்மை தொடர்பில்…
மேலும்

”ஜனாதிபதி ஒருபோதும் தவறாக அதிகாரத்தை பயன்படுத்தமாட்டார்”- ஜி. ல்

Posted by - January 1, 2020
அரசியலமைப்பின் பிரகாரம்  ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஒருபோதும் தவறாக பயன்படுத்தமாட்டார். கடந்த அரசாங்கத்தின் பிரதான அரச தலைவர்கள் அதிகார துஷபிரயோகம் செய்தமையினாலே மக்களால் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என  பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர்…
மேலும்

இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிராக உறவுகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - January 1, 2020
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது, வவுனியா வீதி, அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1047 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே…
மேலும்