ஆட்சிக்காலம் நிறைவடைந்த ஆளுனர்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பு

212 0

மாகாணசபை ஆட்சிக்காலம் நிறைவடைந்த மாகாணங்களின் ஆளுனர்கள் ஜனாதிபதியுடனான சந்;திப்பொன்றிற்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய வடமத்திய மாகாண ஆளுனர் பி.பீ திசாநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றனர்.

குறித்த மாகாணங்களின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இன்று இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் மகாணசபை அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அதிகாரங்கள் அனைத்தும் மாகாண ஆளுனர் உட்பட்ட அரச நிர்வாகிகள் தரப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment