பறக்கும் மோட்டார்சைக்கிளில் ரோந்து செல்லும் துபாய் போலீஸ் துறை

339 0

லம்போர்கினி பெட்ரோல் கார், ரோபோட், ஆண்ட்ராய்டு ஆஃபீசர்களை தொடர்ந்து பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துபாய் போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.

உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால் வியப்பில் ஆழ்த்தும் நாடுகளில் ஒன்றாக துபாய் பார்க்கப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் வானத்தில் பறக்கும் சிறிய ரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படாத நிலையில், துபாய் போலீஸ் துறை பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துவங்கியுள்ளது.

ஏற்கனவே லம்போர்கினி பெட்ரோல் கார், தானியங்கி ரோபோட் மற்றும் ஆண்ட்ராய்டு ஆஃபீசர் போன்ற தொழில்நுட்பங்களை தொடர்ந்து வானத்தில் பறக்கும் மோட்டார்சைக்கிள்களை துபாய் போலீஸ் பயன்படுத்த இருக்கிறது. இதன் மூலம் வானத்தில் இருந்தபடியே கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

ஸ்கார்பியான் என அழைக்கப்படும் புதிய பறக்கும் மோட்டார்சைக்கிள் ரஷ்யாவின் ஹோவர்சர்ஃப் (Hoversurf) எனும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது. நான்கு இறக்கைகள் வாகனத்தின் இருக்கையை சுற்றி நான்கு முனைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோவர்சர்ஃப் மோட்டார்சைக்கிள் தொடர்ச்சியாக 25 நிமிடங்களுக்கு வானத்தில் பறக்கும் என்றும் மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஒருவர் மட்டும் பயணம் செய்யக்கக்கூடிய ஸ்கார்பியான் தானியங்கி முறையில் இயங்கும் என்றும் அதிகபட்சம் 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் துபாய் போலீஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பறக்கும் மோட்டார்சைக்கிள்களையும் பயன்படுத்த துபாய் போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கென துபாய் போலீஸ் துறை மற்றும் ஹோவர்சர்ஃப் நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக ஹோவர்சர்ஃப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அலெக்சான்டர் அடமனோவ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

துபாய் ஜிடெக்ஸ் தொழில்நுட்ப விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட பறக்கும் மோட்டார்சைக்கிள் ஸ்கார்பியானுடன், ஜப்பானை சேர்நத மிகாசா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்பைக் கான்செப்ட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கான்செப்ட் மோட்டார்சைக்கிள் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment