தமிழக கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் – ஜி.கே.வாசன்

9627 0

இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அறிக்கையொன்றின் ஊடாக அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

பாக்கு நீரிணையில் பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருகின்றனர்.

தமிழக கடற்தொழிலாளர்கள் கைதுசெய்யும் இலங்கை கடற்படையின் இநத செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் இலங்கையில் சிறைபிடித்து வைத்துள்ள நிலையில், அவற்றை மீட்க முடியாமல் கடற்தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment