தேராவில் பகுதியில் உள்ள சிறுவர்களின் கல்விவளர்ச்சிக்கான கல்வி நிலையம் ஒன்று வடமாகாண விவசாய அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
காந்தள் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் தேராவில் பகுதியில் சிறுவர்களுக்கான இலவச கல்வி நிலையம் ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு கல்விநிலையத்தை திறந்துவைத்துள்ளார்.
இதில் 5ஆம் ஆண்டிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவசமாக கல்வி கற்கப்படவுள்ளது இதில் 30ற் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறவுள்ளார்கள்.
நடைபெற்ற நிகழ்வில் சிறுவர்களின் கலைநிகழ்வு மற்றும் பிரதேசத்தில் உள்ளமக்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் பல்வேறு கோரிக்கைகள் வடமாகாண அமைச்சரிடம் கிராம அபிவிருத்தி சங்கம் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளது.

