இராணுவ ஆவணங்களை திருடியது வடகொரியா

20716 0

வடகொரிய தலைவர் கிம் ஜோன் ஹூங்கை படுகொலை செய்வது உள்ளிட்ட அமெரிக்க மற்றும் தென்கொரியாவின் திட்டங்கள் அடங்கிய இராணுவ ஆவணங்களை வடகொரியா திருடியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வடகொரிய இணைய ஊடுருவிகள் குறித்த ஆவணங்களைத் திருடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தென்கொரிய பாதுகாப்பு அமைச்சிடமிருந்து குறித்த தகவல் கிடைத்ததாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரியீ செலோ ஹீ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் தென்கொரியாவினால் போர்கால திட்டங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

235 ஜிகா பைட்ஸ் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.

தென்கொரிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு தரவு திரட்டு நிலையத்திலிருந்து இந்த ஆவணங்கள் களவுபோயுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக தமது இணையத்தில் வடகொரிய நுழைய முயற்சித்ததாக தென்கொரிய தகவல் வெளியிட்டிருந்தபோதும், அது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

Leave a comment