பல்­லே­க­லையில் ஆறு பேர் கைது.!

297 0

கண்டி பல்­லே­கலை பொலிஸார் தங்கள் அதி­கார பிரிவில் நேற்று நடத்­திய திடீர் சோத­னை­களின் போது போதை­ப்பொருள் வியா­பா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள்  என்ற சந்­தே­கத்தின் பேரில் முன்னாள் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்­பட ஆறு பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பல்­லே­கலை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி டொனால் அபே­ரத்ன, பொலிஸ் சார்ஜன்ட் நவ­ரத்ன ஆகி­யோரின் தலை­மை­யி­லேயே இத் திடீர் சோதனை இடம்­பெற்­றது.

கெங்­கல்ல, பல­கொல்ல , கொலங்­கா­வத்த, அரங்­கல, மக­வத்த போன்ற கிராம பகு­தி­களில் பொலிஸார் இச்சோத­னை­களை நடத்தி சந்­தேக நபர்­களை கைது செய்­த­துடன் அவர்­க­ளி­ட­மி­ருந்த 60 மில்லி கிராம் ஹெரோ யின், 1650 மில்­லி­கிராம் கஞ்சா ஆகி­ய­வற்­றையும் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

குறித்த சந்­தேக நபர்கள் இப்­பி­ர­தே­சங்­களில் நீண்­ட­கா­ல­மாக போதைப் பொருள் வியா­பா­ரத்தில் ஈடு­பட்­டுள்­ள­தாக பொலி­ஸாரின்  விசா­ர­ணையின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.  குறித்த ஆறு பேரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment