தற்போதைய அரசாங்கம் செல்லுபடியற்ற அரசாங்கமாக மாறியுள்ளது – தினேஸ்

407 0

தற்போதைய அரசாங்கம் செல்லுபடியற்ற அரசாங்கமாக மாறியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

ருவன்வெல்ல பிரசேத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு ஏற்ப இலங்கையின் நிதி அபிவிருத்தி சார்ந்த வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறான விடயங்களுக்கு இடம்கொடுக்கப்படும்பட்சத்தில் இலங்கையின் பொருளாதாரம் இன்னும் சில காலத்திற்கேனும் எஞ்சியிருக்காது.

எனவே, தேச எதிர்ப்பு செயற்பாடுகளை கொண்ட அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டும் என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment