காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகு கட்டுமானத் தொழிற்சாலை!

322 0

boat_yardகாரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலையொன்று சிறீலங்கா கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அமைக்கவுள்ளது.

சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் இன்று இந்த தொழிற்சாலைக் கட்டுமானப் பணி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அனைத்துலக கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான 55 அடி நீளமுள்ள படகுகளைத் தயாரிக்கப்பபோவதாக சிறீலங்கா அரசாங்கம் ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க, படகுக் கட்டுமான தொழிற்சாலை காரைநகரில் அமைக்கப்படவுள்ளது.

சிறீலங்காவின் மீன் உற்பத்தியில் வடக்கு மாகாணமே முன்னிலை வகிக்கும் நிலையில், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.