மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் கட்டளை திருத்தச்சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்தச்சட்டமூலம் ஏற்கனவே திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்படி புதிய தேர்தல் முறைமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
என்றாலும் தேர்தலை புதிய முறைமையில் நடத்த வேண்டுமாயின் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல்திருத்த சட்டத்திற்கு ஏற்றவாறு நடைமுறையில் உள்ள மாநகர, நகர மற்றும் பிரதேச சபை தேர்தல் கட்டளை சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது.
இதன்பிரகாரம் மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் கட் டளை திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த திருத்தச்சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஒருவேளை குறி த்த சட்டமூலத்திற்கு வாக்கெடுப்பு நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன.
இது தொடர்பில் பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நீல் இத்தவல கேசரிக்கு மேலும் குறிப்பிடுகையில், மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல் திருத்தச்சட்டமூலம் இன்று விவாதத்திற்கு எடுத் துக்கொள்ளப்படவுள்ளது என்றார்.