தீவிரவாத அமைப்பு இந்தியாவிற்குள் ஊடுருவல்- துருக்கி

304 0

201608220354114417_Terror-group-responsible-for-Turkey-coup-infiltrated-India_SECVPFதுருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் 290 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மதகுரு பெதுல்லா குலன்தான் சதி செய்துள்ளார் என்று துருக்கி குற்றம் சாட்டிவருகிறது.

இந்நிலையில், ராணுவ புரட்சி முயற்சிக்கு காரணமாக இருந்த மதகுரு பெதுல்லா குலனின் தீவிரவாத அமைப்பு இந்தியாவிற்கு ஊடுருவி உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துருக்கி வெளியுறவுத் துறை மந்திரி மெவ்லட் காவுசோக்லு, தலைநகர் புதுடெல்லியில் சுஷ்மா சுவராஜ் உடன் கலந்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

’FETO’ என்ற பெதுல்லா குலன் பயங்கரவாத அமைப்பு ரகசியமாக நாடு கடந்த குற்றவியல் நடவடிக்கையை உலகம் முழுவதும் செய்து வருகிறது. துரதிருஷ்டவசமாக இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் ஊடுருவி உள்ளது.

இந்தியா அதற்கு தக்கவாறு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், “துருக்கி நாட்டின் கவலை குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்” என்றார்.