தென் ஆப்பிரிக்காவில் இந்திய பெண் படுகொலையில் மந்திரவாதிக்கு வாழ்நாள் சிறை

38209 0

தென் ஆப்பிரிக்காவில் இந்திய பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மந்திரவாதி மபிலிக்கும், குமலோவுக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர், சிபோனாகலிசோ மபிலி. மந்திரவாதி. இவர் பலேகே குமலோ என்பவரிடம் மாந்திரிக வேலைகளுக்காக ஒரு இந்தியப்பெண் அல்லது வெள்ளைக்காரப்பெண்ணின் தலையைக் கொண்டு வந்தால் 1 லட்சத்து 53 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.99½ லட்சம்) தருவதாக கூறினார்.

இதையடுத்து பலேகே குமலோ, ஜிம்மி, முலுங்கிசி, மபலி ஆகிய 3 பேரின் துணையுடன் தேஸ்ரீ முருகன் என்ற இந்திய வம்சாவளிப்பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி, டர்பன் அருகேயுள்ள சாட்ஸ்வொர்த் என்ற இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து வந்தார்.

அங்கு வைத்து அந்தப் பெண்ணை அவர்கள் 192 முறை கத்தியால் சரமாரியாக குத்தி, தலையைத் துண்டித்து படுகொலை செய்தனர்.

2014-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கில் மந்திரவாதி மபிலிக்கும், குமலோவுக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜிம்மி, முலுங்கிசி ஆகியோருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையும், மபலிக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை அங்குள்ள இந்திய சமூகத்தினர் வரவேற்றனர்.

Leave a comment