இளைஞர் ஒருவரை தாக்கிய காவற்துறை அதிகாரி!

1461 23

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவர் காவற்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

காவற்துறை ஆணைக்குழு காவற்துறை மா அதிபரிடம் இருந்து இது தொடர்பான அறிக்கையை கோரியுள்ளது.

மத்தளை வானூர்தி நிலையம் நீண்ட கால அடிப்படையில் இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் ஒன்றிணைந்த எதிர் கட்சியினால் ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக காவற்துறையினரால் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது ஏற்பட்ட முறுகலின் போதே காவற்துறை அதிகாரி ஒருவரால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கைதுசெய்யப்பட்ட 6 பெண்கள் உட்பட 28 பேரும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment