வைத்தியரை கடத்த முற்பட்ட இரண்டு பெண் உள்ளிட்ட ஐவர் கைது

618 31

வைத்தியர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடமிருந்த சொத்துக்களை கொள்ளையிட முயற்சித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு, கருவாத்தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். வலான குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்று அடையாளப்படுத்தியுள்ள சந்தேகநபர்கள் வைத்தியரிடமிருந்த தங்க மோதிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment