ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும் அவமானம்

470 0

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும் அவமானத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஜப்பானில் வாழும் இலங்கை மக்களின் விசேட அழைப்பிற்கமைய மஹிந்த அங்கு சென்றுள்ளார்.

எனினும் மஹிந்தவுக்கு தேவையான வசதிகளை ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்தவின் ஜப்பான் விஜயத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தே மற்றும் ரோஷான் ரணசிங்க ஆகியோரும் இணைந்திருந்தனர்.

ஜப்பான் இலங்கை தூதரகத்திலுள்ள எந்தவொரு பிரதிநிதிகளும், மஹிந்தவை வரவேற்க டோக்கியோ விமான நிலையத்திற்கு செல்லவில்லை.

பொதுவாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செல்லும் போது தூதரக அலுவலக பிரதிநிதி ஒருவர் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

எனினும் இம்முறை அவ்வாறான ஒன்றும் இடம்பெறாமை தொடர்பில மஹிந்தவின் தனிப்பட்ட செயலாளர் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் கங்கனாத் திஸாநாயக்கவுக்கு அழைப்பேற்படுத்தி கேட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் தனக்கு வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய செயற்பட்டதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதுவர் தனது தேவைக்கு அமைய இவ்வாறு நடந்து கொண்டதாகவும், அரசாங்கத்தினால் எவ்வித உத்தரவும் வழங்கப்படவில்லை என மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment