புதையல் தோண்டிய இருவர் கைது!

322 0

வவுனியா – சிதம்பரபுரம் பிரதேசத்தில் புதையல் தோண்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள மின்சார இயந்திரம் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட மேலும் பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் சிதம்பரபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment