தேசிய கைத்தொழில் பேட்டைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் – ஜனாதிபதி 

221 0

நாட்டில், வெளிநாட்டு சொத்துக்களை அதிகரிக்க செய்ய தேசிய கைத்தொழில் பேட்டைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

வெளிநாட்டு வருமானங்கள் நாட்டுக்கு பொதுமானதாக கிடைப்பதில்லை.

வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் பெறப்படும் வருமானத்தின் ஒரு பகுதியே நாட்டை வந்தடைகிறது.

ஏனையவை வெளிநாட்டவர்களுக்கே செல்கின்றன.

இதனை மாற்றமடைய செய்வதற்கு தேசிய கைத்தொழில் பேட்டைகள் அமைத்தல் மற்றும் உற்பத்திகளை அதிகரிக்க செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment