லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – யேர்மனி, Wuppertal

29814 0

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல்.சங்கர் அவர்களின் 16ம்ஆண்டு நினைவெழுச்சிநாள். 03.10.17 செவ்வாய்கிழமை வூப்பெற்றால் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது.

பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்த இந் நிகழ்வில் தேசியக்கொடிக் கொடியினை தமிழர்ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலப் பொறுப்பாளர் ஏற்றி வைக்க லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல்.சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை நகரசெயற்பாட்டளர் மற்றும் மாவீரர் குடும்ப உறவுகள் அணிவிக்க அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் தமிழீழம் இசைக்குழுவினர் விடுதலைகானங்கள் வழங்கினர் எழுச்சிநடனங்களை கலைபண்பாட்டுக்கழக நடனஆசிரியர்கள் மற்றும் பாரதிகலைக்கூட ஆசிரியை வழங்க மற்றும் தியாகி திலீபன் நினைவு சுமந்த உரைகள் கவிதைகளை தமிழாலயமாணவர்கள் வழங்கினர்.

லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல்.சங்கர் அவர்களின் நினைவு சுமந்த சிறப்புரையை தாயகநலன் பொறுப்பாளர் வழங்கியதுடன் சமகால அரசியல் மற்றும் தாயக உறவுகளுக்கு யேர்மன்வாழ் தமிழீழமக்களால் வழங்கப்பட்ட உதவிகளையும் தனது உரையில் குறிப்பிட்டார். மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்ட இந்நிகழ்வு நம்புங்கள் தமிழீழம்பாடல் இசைக்கப்பட்டு தேசியக்கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.

   

Leave a comment