அரம்பெபொல ரத்னசார தேரரைக் கண்டால் அறிவியுங்கள் – பொலிஸ்

395 0

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் UNHCR இன் கண்காணிப்பின் கீழ் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மிகவும் மோசமான முறையில் நடந்துகொண்ட தேரர் ஒருவர் மற்றும் நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதற்கமைய அரம்பெபொல ரத்னசார தேரர் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருந்ததால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0718 591 727 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கோ அறிவிக்கமுடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதேவேளை வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரகீத் சாணக குணாதிலக என்ற நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்திருப்பின், குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ, அல்லது அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அறிவிக்கமுடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரகீத் சாணக குணாதிலக என்ற நபர் முன்னாள் பொலிஸ் அதிகாரி எனவும், பதவி விலக்கப்பட்டவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக குறித்த நபருக்கு எதிராக முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கி அதற்குச் சேதம் விளைவித்தமை, பாணந்துறை மகளிர் கல்லூரி அதிபரை அச்சுறுத்தியமை உள்ளிட்ட மூன்று சம்பவங்கள் தொடர்பில் பாணந்துறை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Leave a comment