அமெரிக்க துப்பாக்கிச் சூட்டு சம்பவம், சந்தேகநபரின் வீட்டில் ஆயுத கிடங்கு

906 14
அமெரிக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் ஆயுதக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இசை நிகழ்ச்சியின்போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 58 பேர் பலியானார்கள். 515 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று லாஸ்வேகாஸ் நகர பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரின் வீட்டிலிருந்து 18 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஆயிரக் கணக்கான  தோட்டாக்கள் மற்றும் குண்டுகளை வெடிக்க செய்யும் இலத்திரனியல் கருவிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment