தீர்வின்றி தொடரும் அக்கரை தொண்டமனாறு பிரதேச மக்களின் போராட்டம்!

411 0
அக்கரை தொண்டமனாறு பிரதேச மக்களின் போராட்டம் தீர்வின்றி 16நாளாகவும் தொடர்கிறது.
அக்கரை தொண்டமானறு பகுதியில் வலிகிழக்கு பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட சுற்றுலா தளத்தினை அகற்றுமாக கோரி பிரதேச மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் எந்தவித தீர்வும் இன்றி இன்றுடன் 16நாளினை கடந்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
பிரதேசத்தின் உட்கட்மைப்பு மற்றும் கலாசாரத்தினை பேணும் முகாமாக பிரதேச மகளீர் அமைப்பினால் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
குறித்த பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தளத்தினை அகற்றி சிறுவர் பொழுது போக்கு மையமாக மாற்றி தருமாறு நாம் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இது தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டத்தினையும் மேற்கொண்டிருந்தோம். எமது போராட்ட இ;டத்திற்கு வருகை தந்திருந்த மகளீர் விவகார அமைச்சர் எமது போரட்டத்தின் கோரிக்கையினை பார்த்த Nபுhது அதில் ஒரு நிஜயத்தன்மை இருப்பதாக தெரிவித்தார்.
 இது தொடர்பில் தான் முதலமைச்சருடன் கதைத்து நல்லதொரு முடிவினை தருவதாக கூறிச் சென்றவர் இது வரை எமக்கு உரிய பதிலை தரவில்லை. பின்னர் மனித உரிமை அமைப்புக்களும் எமது போராட்ட இடத்திற்கு வருகை தந்து எமது கோரிக்கைகளை கேட்டறிந்து சென்றனர்.
ஆனாலும் அவர்களும் உரிய பதில் வழங்கவில்லை. இங்குள்ள சிறுவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டுமானால் சுற்றுலா தளம் அகற்றப்படவேண்டும்.
சுற்றுலா தளம் என்ற போர்வையில் வரும் இளஞர் யுவதிகள் கலாச்சாரத்திற்கு புறம்பான வகையில் நடந்து கொள்வதுடன், துர் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் நாம் பலமுறை உரிய தரப்பினருக்கு தெரிவித்தும் எந்த பயணும் ஏற்படவில்லை.
 எனவே எமது போராட்டத்திற்கு முதலமைச்சர் சிறந்த முடிவினை தரும் வரை தொடர்ந்து போராட்ட நடவடிக்கையில் ஈடுபடபோவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Leave a comment