மானிப்பாய் பொலிஸாரினால் ஹெரோயின் விற்பனையாளர்கள் கைது!

9802 0
மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் இரகசிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நால்வர் இன்று(02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.என்.டி.நாலக்க ஜெயவீர தெரிவித்தார்.
 கைதான நால்வரும் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் 26வயதுடைய யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அறிந்து கொண்ட இரகசிய பொலிஸார் தாமும் ஹெரோயின் வாங்குவது போல் பாசங்கு செய்து சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.
அத்துடன் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10கிராம் அளவிளான 20மேற்பட்ட சிறுமுடிச்சுக்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளினை கைபெற்றியுள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து கைபெற்றப்பட்ட தொலைபேசியில் இருந்து யார் விற்பனைக்கு வழங்கியிருந்தார்கள் என்பது தொடர்பில் புலண் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகிறது.

Leave a comment