தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

560 0

201608210824097019_Tamil-Nadu-Cricket-Premier-League-ticket-sales-start-today_SECVPFதமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. சென்னை, திண்டுக்கல் நத்தம், நெல்லை ஆகிய 3 இடங்களில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
வருகிற 24-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், தூத்துக்குடி பேட்ரியாட்சும் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 6.50 மணிக்கு தொடங்குகிறது.தொடக்க லீக் ஆட்டத்திற்கு முன்பாக சினிமா நட்சத்திரங்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நடிகர்கள் தனுஷ், மாதவன், நடிகைகள் எமி ஜாக்சன், ஆண்ட்ரீயா, தன்ஷிகா, பாடகர் கார்த்தி, இசை அமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ஆடல், பாடல் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். தொடக்க விழா நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கி அரைமணி நேரம் நடைபெறும்.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. சென்னையில் 24, 26-ந்தேதிகளில் நடக்கும் முதல் 2 ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டரில் வாங்கிக் கொள்ளலாம். காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். ரூ.50, ரூ.100 விலைகளில் டிக்கெட் கிடைக்கும்.

திண்டுக்கல் நத்தத்தில் ஆக.25, 27, 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை அங்குள்ள என்.பி.ஆர். கல்லூரிக்கான திண்டுக்கல் அலுவலகத்தில் இன்று நடக்கிறது. www.bo-o-k-my-s-h-ow.com இணையதளத்தின் வாயிலாகவும் டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்.டி., விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய் கின்றன.