உரிமையாளர் அற்ற வாகனத்தில் 3 துப்பாக்கிகள் மீட்பு

291 0

கம்பஹா பகுதியில் உரிமையாளர் இல்லாத கைவிடப்பட்டு சென்ற மோட்டார் வாகனமொன்றிலிருந்து மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உரிமையாளர் இல்லாத வாகனமொன்று தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த வாகனத்தினுள் T56 வகை துப்பாக்கி காணப்படுவதாக பொலிஸார் அவதானித்துள்ளனர்.

அதனை அடுத்து குறித்த பகுதிக்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment