8 வருடங்களின் பின் கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

205 0
கடந்த 2009ஆம் ஆண்டில் ஒருவரை கொலை செய்து உடலத்தை  காணாமல் ஆக்கிய சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று வாத்துவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரியவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கொலை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர், கொலையை மேற்கொண்டதாக கூறப்படுபவரின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் முக்கிய குற்றவாளியை கைதுசெய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Leave a comment