ஒருவர் பிரபல்யம் இருந்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் – ரணில்

645 36

தற்காலத்தில் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருந்தால் மட்டும் போதுமானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹிங்குரக்கொட பிரதேசத்தில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டின் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை நல்லாட்சி அரசாங்கம் அபிவிருத்தியை நோக்கி முன்னெடுத்துச் செல்கின்றது. பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment