வாக்காளர்களை தடுக்கும் காவற்துறை

39037 0

ஐரோப்பிய நாடான கற்றலோனியாவின் சுதந்திரம் குறித்த மக்கள் ஆணையை கோரும் வாக்கெடுப்பு தற்போது இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல இடங்களில் காவற்துறையினருக்கும் வாக்காளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வாக்காளர்களை வாக்களிக்க விடாது காவற்துறையினர் தடுத்து வருவதினாலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிக்குள் நுழையும் காவற்துறையினர் வாக்கு சீட்டு மற்றும் வாக்கு பெட்டிகளை பலவந்தமாக பறித்து செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்றலோனியா தற்போது ஸ்பேயின் நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்தநிலையில் ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம் பெறுவது குறித்த மக்கள் வாக்கெடுப்பே தற்போது இடம்பெற்று வருகிறது.

எனவே இந்த வாக்களிப்பை இடைநிறுத்துமாறு ஸ்பெயின் அரசாங்கம் கோரியுள்ளதுடன், கற்றலோனியா தனியாக பிரிந்து செல்வதற்கு ஸ்பெயினில் தமது கடுமையான ஆட்சேபனையையும் வெளியிட்டு வருகிறது.

கற்றலோனியா அரசியல் யாப்பிற்கு அமைய இந்த தேர்தலை நடத்துவது சட்டவிரோதமானது என ஸ்பெயினில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் வாக்கு பதிவுகள் பெருமளவில் இடம்பெற்று வருவதாக கற்றலோனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment