புதிய கவர்னர் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

370 0

புதிய கவர்னர் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் புதிய ஆளுனராக பன்வாரி லால் புரோகித் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், அந்த சட்டவிரோத அரசு தடையின்றி செயல்பட அனுமதிகப்பட்டிருக்கிறது.

புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரி லால் புரோகித் தமிழகத்தில் நிலவும் குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்த நாள் முதல் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் அனைத்தையும் புதிய ஆளுனர் ரத்து செய்ய வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி பெரும் பான்மையை நிரூபிக்கும் வரை தமிழக அரசு எந்த கொள்கை முடிவுகளையும் எடுக்காமல் காபந்து அரசாக மட்டுமே செயல்படும்படி முதல்வருக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment