பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்தை புத்தகமாக எழுதியவரின் உரிமைத்தொகை 70 லட்சம் டாலர் பறிமுதல்

391 0

201608201509231896_Matthew-Bissonnette-who-wrote-Osama-raid-book-to-forfeit_SECVPFஅல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட வேளையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை புத்தகமாக எழுதியவரின் பதிப்புரிமைத்தொகையான 70 லட்சம் டாலர்களை அரசுக்கு வழங்க அந்த புத்தகத்தின் ஆசிரியர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட வேளையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை புத்தகமாக எழுதியவரின் பதிப்புரிமைத்தொகையான 70 லட்சம் டாலர்களை அரசுக்கு வழங்க அந்த புத்தகத்தின் ஆசிரியர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த ‘நேவி சீல்’ என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. ஒசாமாவின் பிரேதத்தை கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

இந்த தாக்குதலில் குறிதவறாமல் துப்பாக்கியால் சுடும் சிறப்பு பயிற்சி பெற்ற சிலர் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். அமெரிக்க கடற்படையின் சிறப்பு பிரிவான ‘சீல்’ படையை சேர்ந்த வீரர்கள் சில நிமிடங்களுக்குள் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றி, பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஒசாமாவின் பிணத்துடன் அபோட்டாபாத்தில் இருந்து பத்திரமாக திரும்பினர்.

இந்நிலையில், இந்த தாக்குதலை முன்நின்று நடத்திய சீல் படை வீரர்களில் ஒருவரான மேத்யூ பிஸொனேட் என்பவர், ஒசாமாவை வேட்டையாடிய தன்னுடைய ‘திரில்’ அனுபவத்தை ’நோ ஈஸி டே’ என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டார். சமீபத்தில் வெளியான இந்த புத்தகத்தில் தனது துப்பாக்கியில் இருந்து பாய்ந்துச் சென்ற குண்டுகள்தான் ஒசாமாவை பரலோகத்துக்கு அனுப்பியது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னர் அதன் கையெழுத்துப் பிரதியை தங்களிடம் சமர்பித்து அனுமதி பெறவில்லை என மேத்யூ பிஸொனேட் மீது குற்றம்சாட்டிய அமெரிக்க கடற்படை தலைமையகம் அவர்மீது தேசத்துரோகத்துக்கு நிகரான குற்றச்சாட்டை சுமத்தி விசாரித்து வந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அரசின் நீதித்துறை அமைச்சகம் மேத்யூ மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தனது வழக்கறிஞரின் தவறான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப்படி இந்த தவறை செய்துவிட்டதாக கோர்ட்டில் விளக்கம் அளித்த மேத்யூ பிஸொனேட், மேற்படி புத்தகத்தை விற்பனைக்கு விட்டதன் மூலம் முன்னர் பெற்ற பணப்பலன்கள் மற்றும் எதிர்காலத்தில் பெறவுள்ள பணப்பலன்கள் ஆகியவற்றை அமெரிக்க அரசுக்கு விட்டுக் கொடுப்பதாக கோர்ட்டிடம் தெரிவித்தார்.

இதன்மூலம் சுமார் 67 லட்சம் டாலர் அளவுக்கான தனது பதிப்புரிமை தொகையை விட்டுக் கொடுப்பதுடன், அமெரிக்க அரசின் தரப்பில் இந்த வழக்குக்கு செலவிடப்பட்ட 13 லட்சம் டாலர்களையும் திருப்பி அளிப்பதாக மேத்யூ பிஸொனேட் கோர்ட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளார்.