சூடுபிடிக்கும் அதிபர் தேர்தல்

395 0

201608191142077054_Naked-Trump-statues-draw-dozens-of-onlookers-in-US-cities_SECVPFஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நியூயார்க் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பெருநகரங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாண சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குடியரசு கட்சியின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் அக்கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் வாழும் ஓவியக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய ‘INDECLINE’ என்ற அமைப்பு டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மத்திய பூங்காவில் நேற்று திடீரென டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாண சிலையை இந்த அமைப்பு காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பூங்காவுக்கு பொழுதுபோக்க வந்தவர்கள் இந்த சிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பெரிய தொந்தி வயிறு, குட்டிக்குட்டியாய் கைவிரல்கள் என பலரை ஆச்சரியப்படுத்திய இந்த சிலைக்கு அருகில் நின்று சிலர் செல்பியும் எடுத்து கொண்டனர்.

சிலமணி நேரத்துக்கு பின்னர் அங்குவந்த நியூயார்க் நகர பூங்கா மற்றும் மனமகிழ் மன்ற அதிகாரிகள் அந்தச் சிலையை அங்கிருந்து அகற்றி, வேறொரு இடத்துக்கு தூக்கிச் சென்றனர். சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ், மன்ஹாட்டன், சியாட்டல், கிளிவ்லேண்ட் ஆகிய முக்கிய பெருநகரங்களிலும் இதுபோன்ற சிலைகள் வைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.