தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தம்: பிரான்ஸ் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு

8708 0

பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் புதிய தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் அதிபருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பது மற்றும் நீக்குவதை எளிமைப்படுத்தும் வகையிலான புதிய சட்டங்களை அதிபர் மெக்ரானின் அரசு அறிமுகப்படுத்தியது. மேலும், அடுத்தாண்டிலிருந்து இந்த சட்டங்கள் அமல் செய்யப்போவதாக அறிவித்தது.

அதிபர் மேக்ரானின் இந்த சட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, அக்கட்சிகள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. நேற்று, பாரீஸ் நகரில் பிரம்மாண்ட பேரணியையும் இடதுசாரியினர் நடத்தினர்.

அதிபர் தேர்தலில் தன்னை வலதுசாரி, இடதுசாரி இரண்டிற்கும் பொதுவானவராக சொல்லி வந்த மெக்ரான் இப்போது வலதுசாரியாக மாறிவிட்டார் என்று எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்பவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனாலும், போராட்டங்களை கண்டு தனது முடிவிலிருந்து பின் வாங்கப்போவதில்லை என்று மெக்ரான் அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் மத்தியில் அதிபர் மேக்ரானுக்கு இருந்த செல்வாக்கு சரிந்துள்ளது.

Leave a comment