தைரியம் இருந்தால் முஷரப் பாகிஸ்தான் திரும்பி வழக்கை சந்திக்கனும்: சர்தாரி

9302 0

என்மீது பழிபோடும் முஷரப், தைரியம் இருந்தால் பாகிஸ்தான் திரும்பி வழக்கை சந்திக்கனும் என்று முன்னாள் அதிபர் சர்தாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி ராவல் பிண்டியில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது படுகொலை செய்யப்பட்டார். அவரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பதவி ஆதாயத்துக்காக பெனாசிர் பூட்டோவை அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரியே கொலை செய்துள்ளார் என முன்னாள் அதிபரும், சர்வாதிகாரியுமான பர்வேஷ் மு‌ஷரப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் இதேபோன்றுதான் 2006-ம் ஆண்டு பெனாசிரின் சகோதரரையும் ஆசிப் அலி சர்தாரி கொலை செய்தார்.இந்நிலையில் முஷரப்பிற்கு முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை சேர்மனும் ஆன ஆசிப் அலி சர்தாரி பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து சர்தாரி கூறுகையில் ‘‘முன்னாள் அதிபர் முஷரப்பிற்கு தைரியம் இருந்தால், பாகிஸ்தான் திரும்பி கோர்ட்டில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment