கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார்

371 0

2rrUl9hkகாரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.இதனைஉறுதிப்படுத்தும் வகையில் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையும் அமைந்துள்ளது என்றும் யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அ;தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.

காரைநகர் திக்கரையினைச் சேர்ந்த ச.துவாரகா என்னும் 15 வயது சிறுமி கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காணாமல் போயிருந்தார். காணாமல் போயிருந்த அவர் மறுநாள் அப்பகுதியில் உள்ள கிணற்றுக்குள் சடலமாக இணங்காணப்பட்டிருந்தார்.குறித்த சிறுமியின் உயிரிளப்புத் தொடர்பாக பலதரப்பினர்களும் பல்வேறு விதமான சந்தேகங்கள் எழும் வகையில் தகவல்களை வெளியிட்டள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகள் தொடர்பாக யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்iகியல்:- குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் அப்பகுதி மக்களிடையே பெரும் குழப்பமான நிலை காணப்பட்டிருந்தது. குறிப்பாக சிறுமி காணாமல் போயிருந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இக் குழப்பமான நிலை மக்களிடையே காணப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொர்பாக பொலிஸார் சம்பவ இடத்திலும், மேலதிகமாக செய்யப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறுமி குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகதற்கொலை செய்து கொண்டுள்ளார்.உயிரிளந்த சிறுமியின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்ட பிரேத பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. இப் பிரேத பரிசோதனையில் சிறுமியின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்றும், அவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கான எந்த தடையங்களும் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்து என்று சட்ட வைத்திய அதிகாரி எமக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸார் உண்ணிப்பான விசாரணைகளை மேற்கொள்வார்கள். பொது மக்கள் வீண் குழப்பம் அடையத் தேவையில்லை என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.