லண்டன் சுரங்க ரெயில் குண்டு வெடிப்பு: கைது செய்த இரண்டு பேரை போலீசார் விடுவித்தனர்

218 0

லண்டன் சுரங்க ரெயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரை போலீசார் விடுவித்துள்ளனர்.

லண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரெயில் (டியூப் டிரெயின்) சேவை இயங்கி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ரெயிலில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். கிரீன் நிலையத்தை நெருங்கியபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடி குண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் 30 பேர் காயம் அடைந்தனர்.

அந்த பக்கெட்டுக்குள் சில ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என பெருநகர லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சுரங்க் ரெயிலில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரை போலீசார் நேற்று விடுவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சுரங்க ரெயில் தாக்குதல் தொடர்பாக செப்டம்பர் 16-ம் தேதி அவுன்ஸ்லோ பகுதியில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய நபரும், செப்டம்பர் 20-ம் தேதி நியூபோர்ட் பகுதியில் கைது செய்யப்பட்ட 48 வயதுடைய நபரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள மற்ற நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் கொடுத்துள்ள முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Leave a comment