இன்டோ ஆசிய பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டார் மகேஷ் சேனாநாயக

268 0

உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு தென்கொரியா, சியோலியில் இடம்பெற்று வரும் இன்டோ ஆசிய பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு கருத்தரங்கில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக கலந்து கொண்டுள்ளார்.

“ஒற்றுமை, முயற்சி இராணுவ பங்கீட்டிற்கான தரைப்படை நடவடிக்கைகள் அல்லாத பாரம்பரியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்” என்ற தலைப்பின் கீழ் கடந்த 18ஆம் திகதி தொடக்கம் இன்று வரை தொடர்ந்து நான்கு நாட்களாக குறித்த பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.

இம் மாநாட்டிற்கு இலங்கை உள்ளிட்ட 29 நாடுகளிலிருந்து இராணுவ மூத்த தளபதிகள் பங்கேற்றுள்ளனர்.

இம் மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் ஜெனரல் பான்கிமூன் பிரதம உரையை ஆற்றினார். ஜெனரல் வின்சன்ட்கே, தென்கொரியாவின் முன்னாள் தூதுவர் மைக்கேல் ஓன்லான் போன்றோர் இம் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இங்கு கலந்துகொண்ட இராணுவ தளபதிகளிடையே இருதரப்பு மற்றும் இராணுவ இராஜதந்திரத்திற்கான வாய்ப்பு தொடர்பாக ஆராயப்பட்டது.

முக்கிய பாதுகாப்பு பிரச்சினைகளில் பிராந்தியத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடையே உறவுகளை ஊக்குவிப்பதை அடிப்படை நோக்காக கொண்டு இம் மாநாடு 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment