சாவின் விழும்பில் நிற்கும் முன்னாள் போராளிகள்!

465 0

625.368.560.350.160.300.053.800.560.160.90-22தங்கமும் வைரவமும் விளைகின்ற தழிழன் தேசத்திலே மண்டை ஓடுகளும் மாமிசப் பிண்ணடங்களும் இன்று புதைந்துள்ளன ஆயிரம் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எமது வரலாற்று சின்னங்களும் எமது பாரம்பரியத்தின் அடையாளங்களும் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய ஆழங்களில் எல்லாம் அநீதியான முறையிலே தழிழர்கள் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளனர் மரம்செடிகளை நடுவதற்காக மண்னை வெட்டினால் மண்டை ஓடுகள் வருகின்றன. நெல்வயல்கள் எங்கும் முள்ளந் தண்டுகளும் முழங்கால் சிரட்டைகளும் சிதறிக்கிடக்கின்றன. நெல்விளையும் வயல்களிலே மண்டை ஓடுகள் தானாக விளையுமா?

மனிதாபிமான இல்லாத மனித குலத்துக்கெதிரான இவ்வாறான படு கொலைகளை செய்தது யார்? படுகொலை செய்யப்பட்டவர்கள் யார்? நிச்சயமாக அங்கே படுகொலை செய்யப்பட்வர்கள் தழிழர்கள் தான் அதே போல படுகொலை செய்தவர்கள் ஸ்ரீலங்கா அரச படைகள் என்பதை விட சிங்களவர்கள் தான் என்று கூறுவது மிகவும் பொருத்தமான ஒன்று.

காரணம் முள்ளிவாய்காலில் சிங்கள அரச படைகளின் முற்றுகைக்குள் பல்லாயிரக்கக்காண மக்கள் குண்டு மழையிலே நனைந்து அவலக் குரலிட்டு கதறி அழுதபோது போரை நிறுத்த வேண்டாம் என்றும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த தழிழினப் படுகொலையை நிறுத்த வேண்டாம்என்றும் ஒட்டு மொத்த சிங்களவர்களும் குரல் கொடுத்தது மட்டுமல்ல அந்த இன அழிப்பின் பங்காளிகளாக ஏதோ ஒரு வகையில் செய்யப்பட்டவர்கள் எனவேஇனப்படுகொலையினை நடத்தியவர்கள் அரச படைகள் என்பதை விட சிங்களவர்கள் என்று குறிப்பிடுவது சரியானது.

இந்த தேசத்திலே சுயமரியாதையுடன் மற்ற சமூகத்தினரைப் போல சம அந்தஸ்துடன் வாழ வேண்டும். என்று ஆசைப்பட்ட ஓரே காரணத்திற்காக பல்லாயிரக்கணக்கான தழிழர்கள் அநீதியான முறையிலே கொலை செய்யப்பட்டார்கள் ஆனால் நடைபெற்று முடிந்ததாக கூறப்படும் கொடியபோர் அந்த கொடிய இனப்படுகொலை இன்றுவரை நீண்டு செல்கின்றது.இதை தடுக்க முடியாத நிராயுத பாணிகளாகவும் ஏன் என்று கேட்க அதிகாரமன்ற அப்பாவிகளாகவும் தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்;கிறார்கள்.

தம்மீது நடைபெற்ற கொடிய இனப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சர்வதேசத்தை நோக்கி ஏக்கத்தோடு காத்திருக்கும் தழிழர்களுக்கு மேலும் மேலும் பல சோதனைகளும் தொடந்தவண்ணமே உள்ளன. இறுதிக்கட்ட போரிலே நடைபெற்ற அநீதிகளுக்கெதிராக ஒட்டுமொத்த தமிழினமும் போராடிக் கொண்டிருக்கின்றது. முள்ளி வாய்க்கால் இனப்படு கொலையின் குற்ற வாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். என்பதற்காக ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும் தழிழ் அமைப்புக்களும் போராடிக் கொண்ருக்க. இன்று தழிழர்கள் மத்தியிலே புதிதாக ஒரு பாரிய பிரச்சினை தோன்றியுள்ளது. பாரிய பிரச்சினை என்பதை விட ஒரு பாரிய மர்மம் என்று கூறலாம்.

ஆம் அனைவழரயும் பாரிய ஒரு அதிர்ச்சிக்குள்ளாகிய முன்னாள் போராளிகளின் மரணம் இந்த மரணத்தின் மூலகாரணியாக கருதப்படும் புற்று நோய்; யாரோடு நேவோம் யார்க்கெடுத்துரைப்போம் என்று இறைவனை நொந்தபடி செய்வதொன்றும் அறியாது தவிக்கின்றனர். அநீதியாக படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக நீதி வேண்டி நிற்கும் தமிழ் சமூகம் இன்று வஞ்சகமானக முறையிலே படுகொலை செய்யப்படும் முன்னாள் போராளிகளின் உயிர்களை எவ்வாறு காபாற்றலாம் என்று தத்தளிக்கின்றது.

ஆனால் ஆட்சியாளர்களே அதிகார வர்க்கத்தினரோ இதைப்பற்றி சிந்திப்பவர்களாக இல்லை அவர்களை பொறுத்தவரை மரணம் என்பது மனிதனுக்கு திகழ்கின்ற சாதாரண ஒன்று எனவே இவற்றை பெரிதுபடுத்த வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை. ஆனால் தமிழர்களை பொறுத்தவரை அப்படி அல்ல மரணம் என்பது சாதாரனம் தான் ஆனால் அங்கே மரணிக்கின்றவர்கள் சாதாரணமாக மரணிக்கவில்லை மர்மமான முறையிலே அதுவும் புணர்வாழ்வு என்று கூறப்படும் இலங்கை அரசின் கொடிய வதை முகாங்களில் இருந்து விடுதலை ஆகின்ற முன்னாள் போராளிகளில் மட்டும் ஓரே மாதிரியான மர்மமான நோயாள் பாதிக்கப்படுவது எவ்வாறு?

மனித குலத்தின் மாணிக்கங்களான ஒழுக்கு சீலர்களாக வாழ்நத போராளிகளுக்கு இந்த கொடிய புற்று நோய் ஏற்படுவது எவ்வாறு? புற்று நோய்க்கான மூலகாரணிகளாக கூறப்படும் புகைத்தல் வெற்றிலை, மது அருந்தல் போன்ற எந்த தவறான பழக்கங்களும் அற்ற ஒழுக்கத்தில் சிறந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு இந்த புற்று நோய் ஏற்படுவது எவ்வாறு? இதுவரை 107 முன்னால் போராளிகள் ஒரு மர்மமான முறையில் இனங்காணபடாத ஒரு நோயினால் மரணித்திருக்கிறார்கள்.

இதற்கான காரணம் என்ன? இறுதிகட்ட போரில் சிங்கள அரசிடம் சரணடைந்த பல்லாயிரம் போராளிகள் காணாமல் ஆக்கப்பட்ட இல்லாது இரகசிய வதை முகாமுக்கு அனுப்பப்பட்ட ஏனைய போராளிகள் தவிர புனர்வாழ்வு முகாம் என்று கூறுப்படும் சிங்கள அரசின் உத்தியோக பூர்வ வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட இன விடுதலைப் போராளிகள் சுமார் 1200 பேர் இன்று மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுமார் 107 போராளிகள் இதுவரை புற்று நோயால் சாவடைந்துள்ளார் இந்த மரணங்கள் சிங்கள அரசினால் திட்டமிட்டு புனர்வாழ்வு எனும் வதை முகாங்களில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்ட காலத்திலே நஞ்சூட்டப்பட்ட உணவுகள் மூலம் நச்சு தன்மை கொண்ட ஊசிகள் மூலம் இந்த போராளிகளின் உடலிலே செலுத்தியதா சுறுக்கமாக கூறப்போனால் மெல்ல கொல்லும் விசம் இந்த மெல்ல கொல்லும் விசம் சிங்கள அரசு முன்னாள் போராளிகள் அனைவருக்கும் செலுத்தியதா அப்படியானால் முற்றும் ஒரு தமிழினப் படுகொலை இங்கே நிகழப் போகிறதா?

புனர்வாழ்வழிக்கப்பட்டதாக கூறப்படும் 1200 முன்னாள் போராளிகளும் மரணத்தின் விழிம்பிலே நிற்கின்றார்களா? ஒரு இனத்தின் விடுதலையாக தம்மையே அர்ப்பனித்தவர்கள் மனிதப்பிறவியின் வசந்த காலமாக கருதப்படும். இளமைகாலத்தை தமது இனத்தின் வீதலைக்காக தியாகம் செய்த தியாகிகள் இன்று இந்த சமூகத்திலே ஒதுக்கப்பட்டவர்களாகவும் அங்கவீனராகவும் மனநோயாளியாகவும் மூலை முடுக்கிலே ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடினார்கள் என்பதுக்காக இவர்கள் இனவாத மதவாத சிங்கள ஆட்சியாளர்களால் எத்தனையோ கொடுமைகளை சந்தித்து பின்னர் புனர்வாழ்வு என்ற பெயரில் வதை முகாம்களில் வதைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு எஞ்சியுள்ள தமது உறவுகளுடன் இணைந்து வாழ ஆரம்பித்த குறுகிய காலத்திலே கொடிய நோய்களினால் கொல்லப்படுகின்றார்கள்.

நூற்றுக்கும் அதிகமான போரளிகள் இன்று வரை கொல்லப்பட்டுள்ளனர் பல போராளிகள் உடல் வலு இழந்தவர்களாகவும் மன நோயாளிகளாகவும் மாறிக் கொண்டிருக்கின்றனர் நிச்சியமாக இவை இயற்கையாக ஏற்படும் மரணங்கள் அல்ல சிங்கள அரசினால் திட்டமிடப்பட்ட ஒரு பழி வாங்கள் அல்லது படுகொலை என்பது மட்டும் நிதர்சனம். காலத்துககு காலம் சிங்கள இனவெளி அரசுகளால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் படுகொலைகளில் இருந்து மீண்டும் புத்துயிர் பெற்று தமிழர்கள் ஒழுகின்ற போது மீண்டும் புதிய முறையிலே புதிய யுத்தியிலே தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது இன்று நேற்றவை இலங்கை சுதந்திரம் அடைந்ததாக கூறப்படும் நாட்கள் முதல் ஆரம்பமாகிய ஒன்று அதேபோல படுகொலை செய்யப்படுவதும் அதற்கெதிராக போராடுவதும் தமிழர்களுக்கு பழிகிபோன ஒன்று.

ஆனால் இப்போது முன்தாள் போராளிகளின் மர்ம மரணம் என்பது சற்று வித்தியாசமான சவால் மிக்க ஒன்று பத்தாயிரத்துக்கும் அதிகமான முன்றாள் போராளிகள் சாவின் விளிம்பிலே நின்று கொண்டிருக்கின்றனர் இவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அவசியம் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு எனவே அனைவரும் விரைந்து செயலாற்ற வேண்டும் வாதம் செயற்படுவதற்கும் அறிக்கை விடுவதற்கும் கால அவகாசம் தழிர்களிடம் இப்போடு இல்லை. போராளிகளின் உடலிலே செலுத்தப்பட்டதாக கூறப்படும் நச்சு திரவம் அல்லது விச ஊசி தனது செயற்பாட்டினை தீவிரப்படுத்து கொண்டிருக்கின்றது.

எனவே அந்த ஊசியின் செயற்பாட்டினை தடுக்க மாற்று மருந்து அல்லது தடுப்பு அருந்து வழங்கப்பட வேண்டும் என்பது இப்போது அவசியமானதே ஆனால் இப்போது ஒரு பிரச்;சினை இந்த மாற்று மருந்தினை அல்லது மருத்துவ பரிசோதனையினை செய்வது யார்? இப்போது அதற்கான முடிவினை உறுதியாக எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கும் தமிழ் தலமையர்களுக்கும் உரியதே காரணம் எத்தனையோ போராளிகள் இன்று பல ஊடகங்களிலே தடுப்பு முகாம்களில் தமக்கு விச ஊசி போடப்பட்டதாகவும் பலர் ஊசி போட்ட அன்றே சாவடைந்ததாகவும் சாட்சியம் அறிந்துள்ளனர். எனவே இப்போது ஒட்டு மொத்த தமிழர்களின் குற்றச்சாட்டு சிங்கள ஆட்சியாளர்கள் மீது இந்த விடயத்தின் குற்ற வாளி கூண்டிலே ஏற்றப்பட வேண்டியவர்கள் சிங்கள ஆட்சியாளர்களும் அதன் கொடிய இராணுவமும் எனவே குற்றவாளிகள் ஒரு போது நீதிபதியாகவோ நடுநிலையாகவோ செயற்பட முடியாது இந்த அடிப்படையில் முன்னால் போராளிகளின் மருத்துவப் பரிசோதனைக்கு குற்ற வாளி கூண்டில் நிற்கும் சிங்கள அரசை அனுமதிக்க முடியாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலின் எமது அரசியல் கலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் எனவே சர்வதேசத்தின் அனுசரனையுடன் வெளிநாட்டு மருத்துவர்கள் மூலம் அனைத்து போராளிகளும் உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் ஒரு மரண ஏலத்தில் இருந்து தமிழினம் தப்பித்து கொள்ளும். இதை விடுவித்து நல்லாட்சி நல்லினக்கம் எல்லாம் வெளிநாட்டின் தலையீட்டால் நாசமாகிவிடும். என்று காலத்தை வீணடிப்போமானால் என்மைப் போன்ற மூடர்கள் வேறுபாடும் இல்லை எமது தலமைகள் ஒருவருக்கொருவர் முரன்பட்ட கருத்துக்களை முன்வைபர்பதை இந்த விடயத்திலே விடுத்து போட்டி அரசியலை மரந்து ஒருமித்து செயலாற்ற வேண்டும் எத்தனையோ மனிதநேய அமைப்புக்கள் இன்று இலவசமாக மனிதநேயத்தோடு செயலாற்ற சர்வதேசம் எங்கும் தயாராக உள்ளது அவர்களை வரவலைத்து இந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதால் பாதிப்பும் இலங்கை அரசுக்கு எட்டப்போவதில்லை.

எனவே விரைவாக உறுதியான முடிவோடு வெளிநாட்டு மருத்துவர்கள் மூலம் எமது போராளிகளை பரிசோதனை செய்து பாரிய பேரலவில் இருந்து காப்பாற்ற வேண்டும் மேலும் இந்த விச ஊசிப் பிரச்சினை தமிழர்கள் முன்னே இப்போது பாரிய பிரச்சனையாக எழுந்துள்ளது. ஆம் இறுதி கட்ட போரின் போது நாற்பதாயிரத்துக்கு அதிகமானவர்கள் இராணுவத்திடம் சரனடைந்து அல்லது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்காக இவர்களின் உறவுகள் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

கணவனை எதிர் பார்த்த மனைவியும் தாய் தந்தைகளை எதிர் பார்த்த பிள்ளையும் ஆக தமது உறவுகள் விடுதலையாகி வருவார்கள் என்று காத்திருக்கும் உறவுகளுக்கு இப்போது அவர்களின் நம்பிக்கை வீணாகி விடும் அபாயம் தோன்றியுள்ளது ஆம் விடுதலை செய்ய போகின்றோம் என்று தெரிந்தும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்த வைக்கப்பட்ட போராளிகளுக்கே இந்த மெல்லக் கொள்ளும் விசம் கொடுக்கப்பட்டது. என்றால் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு இது வழங்கப்பட்டிருக்க மாட்டாது என்பதற்கு என்ன உத்தர வாதம் நிச்சயமாக அவர்களுக்கு இதே விச ஊசிகள் நஞ்சு சூட்டப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டிருக்கும் என்பது நிதர்சனம்.

இன்று விடுதலை செய்யப்பட்டவர்கள் நூற்றுக்கு அதிகமானவர்கள் புற்று நோயால் அல்லது சிங்கள அரசின் திட்டமிடலால் சாவடைந்துள்ளனர். என்றால் இங்கே இரகசிய வதை முகாம்களிலே எத்தனை தமிழர்கள் சாவடைந்துள்ளார்கள். அல்லது புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது சிந்திக்க வேண்டிய விடயம் எனவே இந்த விச ஊசி விவாகாரம் இப்போதும் தீவிரமடைந்த நிலையிலே இரகசிய முகாம்களிலே உள்ளவர்களுக்கும் இதே போன்ற பாதிப்புக்கள் மரணங்கள் ஏற்படுமானால் அவர்களின் விடுதலை என்பது சாத்தியம் அற்ற ஒன்றே காரணம் இராகசிய முகாம்களிலே மரணிக்கின்ற போது அதை இரகசியமாக அறைத்து விடலாம். ஆனால் அவர்களை வடுதலை செய்யத பின் அவர்களுக்கு மரணமோ பாதிப்புக்கலோ ஏற்பட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கே உள்ளது.

எனவே அவர்களை விடுதலை செய்வது என்பது சிங்கள தேசத்தை பொறுத்தவரைக்கும் தமக்கு தாமே பொறி வைத்து கொள்வது போல ஒரு சூழ் நிலை ஏற்பட்டுள்ளது எனவே இதனை கருத்தில் கொண்டு எமது தமிழ் சமூகம் போராட வேண்டும். பல இடங்களிலே இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாகவும் அங்கே பல தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பல செய்திகள் செவிகளை எட்டும் போது எமது உறவுகளும் அங்கே இருப்பார்கள் என்றுஏக்கத்தோடு காத்திருக்கும் தமிழர்கள் நிலை இலகுகாத்த கிளிகளாக மாறிவிடும்.

முன்னாள் போராளிகளை அழிவிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் அதுவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழனின் விடுதலைக்காகவும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் அவசிய ஏற்பாடின் பாரிய ஒரு மக்கள் போராட்டத்தினை அரசியல் ரீதியாக முன்னெடுக்க வேண்டும். இதனை முதலிலே எமது தலமைகள் புரிந்து கொள்ள வேண்டும் வெட்டி பேச்சுகளும் வீண் விவாதங்களும் காலத்தை வீணடிக்கும் தாமதிக்கும் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு போராளிகளை நாம் இலக்க நேரிடும் விரைந்து செயலாற்ற அனைவரும் ஒன்று படுவோம்.