உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையை சுவீகரித்தலுக்கு எதிராக கடுவெலை முன்னாள் நகர முதல்வர் ஜீ.எச்.புத்ததாசவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வலுவிலக்கச் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, சுவீகரிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் சட்டரீதியானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
2017 ஜனவரி 23 ஆம் திகதியிடப்பட்ட இலக்கம் DDG(P)/01/11 சுற்றுநிரூபத்தின் ஊடாக 2017 பெப்ரவரி 01 ஆம் திகதி தொடக்கம் உள்ளுராட்சி சபையின் கீழ் கையேற்கப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

