பிக்குகளைத் தூற்றிய ரஞ்ஜன் நாமநாயக்க அதிரடி விளக்கம்

267 0

தான் குற்றம் சாட்டியது இந்த நாட்டில் உள்ள கௌரவமிக்க மகா சங்கத்தினருக்கு அல்லவென பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சில் ஆடை சம்பத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ள லலித் வீரதுங்க, அனுஷ பல்பிட்ட ஆகியோர் தொடர்பில் தான் விடுத்திருந்த அறிவிப்புக்கு மகா சங்கத்தினர் வழங்கியிருந்த பதில் குறித்து ரஞ்ஜன் ராமநாயக்க இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார்.

எமது நாட்டிலுள்ள கௌரவமான மகா சங்கத்தினர் குழப்பமடையத் தேவையில்லை. சில் ஆடை சம்பவம் மோசமான ஒரு நடவடிக்கை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அது தேர்தல்கள் சட்டத்தை மீறும் செயல் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை கேலிக்கைக் குறியதாக மாற்றுவது சிறந்த நடவடிக்கையல்ல.

இந்த சம்பவத்துக்கு என்னை தூற்றி பயனில்லை.  தேரர்கள் அன்பு கருணையுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இன்றுள்ள சில தேரர்கள் மாளிகைகளைக் அமைக்கின்றனர். சிலர் சாஸ்திரம் சொல்கின்றார்கள். மற்றும் சிலர் செவ்வினை சூனியம் செய்கின்றார்கள். பணம் தேடுவதே அவர்களது பிரதான நோக்கம். திரிப்பிட்டகேயில் இதுபோன்றவைகள் இல்லை. இவை அனைத்தும் பிக்குகளுக்கு தேவையற்ற வேலைகள் எனவும் ரஞ்ஜன் ராமநாயக்க கூறியுள்ளார்.

Leave a comment