யாழில் தொடர்ந்தும் டெங்கின் தாக்கம்!

204 0
யாழ்ப்பாணக் குடாநாட்டில் டெங்கின் தாக்கம் தொடர்ந்த வண்ணமே உள்ள நிலையில் இந்த மாதத்தின் முதல் 15 தினங்களில் மட்டும் 76பேர் வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்றுள்ளதாக மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற  டெங்கு கட்டுப்பாட்டுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குடாநாட்டில் அதிகரிக்கும் டெங்கை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் எதிர்வரும் 20ம் திகதி முதல் 26 ம் திகதிவரையில் குடாநாடு முழுவதும் மேற்கொள்வதற்கு குறித்து மாவட்டச் செயலாளர் தலமையில் இடம்பெற்றது.இதன்போதே மேற்படி தகவல்களும் தெரிவிக்கப்பட்டன.
இங்கே குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது ,
யாழ்ப்பாணக் குடாநாட்டில் டெங்கின் தாக்கம் தொடர்ந்த வண்ணமே உள்ள நிலையில் இந்த மாதத்தின் முதல் 15 தினங்களில் மட்டும் 76பேர் வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்றுள்ளனர். இதேநேரம் குடாநாட்டில் டெங்கின் தாக்கம் இதுவரையில் குறையாதமையினால் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் மூலம் அதனை கட்டுப்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது.
இம் முயற்சிக்கு அனைத்து தரப்பின் ஒருங்கிணைந்த முயற்சியிலான கூட்டு முயற்சிகள் இடம்பெறும் .்இதேவேளை தற்போதும் டெங்கு அதிகரித்த பிரதேச செயலாளர் பிரிவாக கோப்பாய் மற்றும் சண்டிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ள அதேநேரம் ஏனைய சில பிரதேசங்களிலும் அதன் தாக்கம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

Leave a comment