காணிகளை மீட்டுத் தருமாறு கைவேலி மக்கள் கோரிக்கை

359 0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பிரதேசத்தில் முன்னாள் போராளி குடும்பங்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 25 வீட்டுத்திட்ட பகுதி காணிகளை மீளக்கையளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு இன்று மாகாண சபை உறுப்பினரையும் அழைத்துக்கொண்டு  சென்ற மக்கள் தமது காணிகளிலிருந்த வீடுகள்கிணறுகள் மற்றும் மலசல கூடங்கள் என்பவை அழிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு கைவேலி பிரதேசத்தில் 2000 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளால் போராளி குடும்பங்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களிற்கு காணிகள் வழங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.

எனினும் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்து சென்ற மக்கள் காணிகளை சென்று பார்வையிட்டபோது குறித்த பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துஇராணுவத்தினரின் அறிவித்தல் பலகை காணப்பட்டதாகவும்,

இந்த நிலையில் தாம் முன்னாள் போராளிகளாக இருந்தமையால் அச்சம் காரணமாக திரும்பி சென்றதாக தெரிவிக்கும் மக்கள்தற்போது இராணுவத்தினர் வெளியேறியுள்ள நிலையில் குறித்த காணியை வனவளப்பாதுகாப்பு பிரிவினர் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது வறுமைக்கோட்டின் கீழ் தாம் வாழ்ந்து வருவதாகவும்எனவே தமது காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியை பார்வையிட்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் மக்கள் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.மகஜரை பெற்றுக்கொண்ட ரவிகரன் குறித்த விடயத்தை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் வருகின்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கலந்துரையாடி உங்களது காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் தெரிவித்தார்.

Leave a comment