பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை கைது செய்யப்பட வேண்டும் – தாயகத்திற்கான இராணுவம் அமைப்பு

5120 23

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என ‘தாயகத்திற்கான இராணுவம்’; என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் இணைப்பாளர் அஜித் பிரசன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் சர்வதேசத்திற்கு இலங்கை காட்டிக்கொடுக்கப்பட்டது.

அதன் பயனை இலங்கை தற்போது அனுபவித்து வருகின்றது.

இந்த நிலையில்,இலங்கை இராணுவத்திற்கு எதிராக வாக்கு மூலம் வழங்க சரத் பொன்சேகா முன்வந்துள்ளார்.

அமெரிக்க ராஜாங்க அலுவலகத்தில் அவர் வாக்கு மூலம் ஒன்றை வழங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, சரத் பொன்சேகாவை தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து சிறையடைக்க வேண்டும் என ‘தாயகத்திற்கான இராணுவ’ அமைப்பின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment