ஒன்றிணைந்த எதிரணியின் சிலர் அரசாங்கத்துடன் இணைய தயார் – லக்ஷ்மன் கிரியெல்ல

1788 16

அமைச்சர்கள் பதவி விலகும்பட்சத்தில் அரசாங்கத்தில் இணைந்து அந்தப் பதவிகளைப் பொறுப்பேற்க ஒன்றிணைந்த எதிரணியின் சிலர் தயாராக இருக்கிறார்கள் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வத்தேகமயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் சிலர் பதவி விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின.

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக கூறும் ஒருவர்கூட, வெளியேற மாட்டார்கள் எனத் தாம் உறுதியாக கூறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பதவி விலகும் பட்சத்தில் அவர்களின் பதவிகளை ஏற்றுக்கொள்ள ஒன்றிணைந்த எதிரணியின் சிலர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment