ஜெனீவாவில் மாறப்போகும் கணக்கு ; இலங்கை அரசாங்கமும் , கூட்டமைப்பும் ஏட்டிக்குப் போட்டியான முயற்சி

5370 0

maniஇலங்கை விவகாரம் குறித்த வாய்மூல ஜெனீவாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏட்டிக்குப் போட்டியாக சந்திப்புக்களை நடத்திவருகின்றன.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிவிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.

குறிப்பாக ஜெனிவாவில் தங்கியுள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆராயசிங்க உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடன் ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்துவருகின்றார்.அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவம் குறித்தும் அதன் கட்டமைப்பு தொடர்பாகவும் அவர் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் அண்மையில் வொஷிங்டனில் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.அதாவது உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளனர்.

இதேவேளை உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார்கள் என்ற விடயத்தையும் அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பான பிரேரணைக்கு அமைவாக அரசாங்கமானது உள்ளக விசாரணை பொறமுறையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையிலேயே எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment