வட கொரியாவின் அணு ஆயுத சோதனை – இலங்கை பெரும் அதிருப்தி

279 0

வட கொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆறாவது அணு ஆயுத சோதனை தொடர்பாக இலங்கை அரசாங்கம் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

வெளிவிவகார அமைச்சால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் நடவடிக்கை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறுவதாக உள்ளதுடன், பிராந்தியம் மற்றும் அதற்கப்பால் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அமைந்துள்ளது.

எனவே, பிராந்தியத்தின் நலன் கருதி இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து வடகொரியாவை விலக்குவதற்காக சர்வதேச சமூகத்துடன் இலங்கை ஒன்றிணைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 செப்டெம்பர் 11 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய தீர்மானத்தை இலங்கை வரவேற்கிறது.

அத்துடன்,  பாதுகாப்பு சபை தீர்மானங்களை செயற்படுத்துவது தொடர்பான தமது கடமைகளை கடைப்பிடிப்பதற்கான உறுதிப்பாட்டினை இலங்கை அரசாங்கம் மீள வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment