18 வருடங்களின் பின்னர் முகமாலை புனித ஆரோக்கிய மாதா திருவிழா 

223 0
முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலையத்தின்  வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாக உள்ளது.
நாளை மறுதினம்  மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாட்டுடன் திருப்பலி நடைபெற்று எதிர்வரும் 17ஆம் திகதி காலை 6.30க்கு திருநாள் திருப்பலி  நடைபெறும்.
முகமாலையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையின் காரணமாக முனமாலை யுத்த சூனியப் பிரதேசமாகவும் காணப்பட்டது.
அதன் காரணமாக முகமாலையில்  இருந்து மக்கள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக மீள்குடியேற்றம் இடம்பெறாத நிலையில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment