அர்ஜுன் அலோசியசை பலவந்த படுத்த முடியாது – ஜனாதிபதி ஆணைக்குழு

210 0
பிணை முறி விநியோக மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு அர்ஜுன் அலோசியஸ் விரும்பவில்லை என்றால் அவரை பலவந்த படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணை முறி விநியோக மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று இதனை அறிவித்தது.
பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தொடர்ந்து ஐந்து தினங்களாக இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த நிலையில், மேலும் தமக்கு இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாக விருப்பமில்லை என்றும், அதனால் தம்மை இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாவதில் இருந்து விடுவிக்குமாறும் அவர் தமது சட்டத்தரணி ஊடாக கோரியிருந்தார்.
அதுதொடர்பில் ஆராய்ந்த ஆணைக்குழு, ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு அர்ஜுன் அலோசியஸ் விரும்பவில்லை என்றால் அவரை பலவந்த படுத்த முடியாது என அறிவித்துள்ளது.
இதனிடையே, அர்ஜுன் அலோசியஸ், சர்ச்சைக்குரிய பிணைமுறி தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையானார்.
வாக்கு மூலம் அளிப்பதன் பொருட்டு அந்த ஆணைக்குழு விடுத்த அழைப்பின் பேரில் அவர் அங்கு முன்னிலையானார்.
இந்தநிலையில், இவரிடம் தற்சமயம் வாக்கு மூலம் பெறப்பட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment