முரசொலிமாறன் சிலைக்கு கருணாநிதி மரியாதை

324 0

201608171059528455_83-years-old-Birthday-Murasolimaran-statue-honor-Karunanidhi_SECVPFமறைந்த முன்னாள் மத்திய மந்திரி முரசொலிமாறனின் 83-வது பிறந்த நாள் விழா இன்று நடந்தது.
இதையொட்டி கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் அமைந்துள்ள முரசொலிமாறன் சிலைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, தயாநிதிமாறன், எ.வ.வேலு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மு.க.தமிழரசு, ஜெ.அன்பழகன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன், மு.க.செல்வம், அன்புதுரை, வி.எஸ்.ராஜ், மேட்டுகுப்பம் கமல கண்ணன், தணிகாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.