உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகளுக்காக மூடப்படும் பாடசாலைகள்

30085 0

க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்ட வினாத்தாள் திருத்தப் பனிகளுக்காக எதிர்வரும் 13ம் திகதி முதல் 26ம் திகதி வரை குறிப்பிட்ட சில பாடசாலைகள் மூடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் W.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் 7 பாடசாலைகள் முழுமையாக மூடப்படுவதாகவும் 20 பாடசாலைகள் பகுதி அளவில் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பகுதி அளவில் மூடப்படும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமை போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை முழுமையாக மூடப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி திருத்தப் பணிகளுக்காக மூடப்படும் பாடசாலைகளின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (அ|நு)

முழுமையாக மூடப்படும் பாடசாலைகள்

1. C.W.W.கன்னங்கரா வித்தியாலயம் கொழும்பு 08
2. ஆனந்த வித்தியாலயம் கொழும்பு 10
3. குருளுஹோமி வித்தியாலயம்-களுத்துறை
4. லக்டாஸ் டி மெல் வித்தியாலயம-குருநாகல்
5. சுதர்மா வித்தியாலயம்-காலி
6. சர்வேசஸ் வித்தியாலயம்-மாத்தறை
7. சீவளி நவோதய மகா வித்தியாலயம்-பண்டாரவெல

பகுதி அளவில் மூடப்படும் பாடசாலைகள்

1. D.S.சேனாநாயக்க வித்தியாலயம்-கொழும்பு
2. லும்பினி வித்தியாலயம் -கொழும்பு
3. யசோதரா மகளிர் வித்தியாலயம்-கம்பஹா
4. பராக்ரம வித்தியாலயம்-கம்பஹா
5. ஹரிஸ்சந்த்ர வித்தியாலயம்-நீர்கொழும்பு
6. றோயல் கல்லூரி-குருநாகல்
7. சாரநாத் வித்தியாலயம்-குளியாபிட்டிய
8. சென்.ஜோசப் மகளிர் கல்லூரி-கேகாலை
9. சீவளி மத்திய வித்தியாலயம்-இரத்தினபுரி
10. புஷ்பத்தான மகளிர் வித்தியாலயம்-கண்டி
11. உயர் மகளிர் கல்லூரி-கண்டி
12. சங்கமித்தா கல்லூரி-காலி
13. தர்மதூத கல்லூரி-பதுளை
14. சென் ஜோசப் கல்லூரி-அநுராதபுரம்
15. பெந்திவெவ மகா வித்தியாலயம்-ஜெயந்திபுர
16. மஹாநாம கல்லூரி-கண்டி
17. சென்.சிசிலியா மகளிர் கல்லூரி-மட்டக்களப்பு
18. இந்து மகளிர் கல்லூரி-யாழ்ப்பாணம்
19. சைவ பிரகாஷ் வித்தியாலயம்-வவுனியா
20. காமில் பாத்திமா மகளிர் கல்லூரி-கல்முனை

Leave a comment