4 ஆவது சிமாட் வகுப்பறைவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் திறந்து வைப்பு

371 0

உடையார் கட்டு அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையின் 4 ஆவது சிமாட் வகுப்பறை வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் பாடசாலைகளின் கணணி கல்வி அறிவை ஊட்டி வளர்க்கவேண்டும் என்ற செயற்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் உள்ள நன்கொடையாளர்களினால் உடையார் கட்டு மகாவித்தியாலயத்திற்கு இதுவரை 4 சிமாட் வகுப்பறை கட்டடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
தரம் 2இல் கல்விகற்கும் 100ற்கு மேற்பட்ட மாணவர்களுக்காக சுமார் 5இலட்சம் ரூபா செலவில் 3 சிமாட் வகுப்பறை கட்டடங்கள் ஏற்கனவே கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தரம் 2இல் கல்விகற்றும் மாணவர்களுக்காக புதுக்குடியிருப்பினை சேர்ந்த அமரர் நதியா பேரம்பலம் நினைவாக பிரான்சில் இருக்கும் பிரியங்கா நிசாந்தன் குடும்பத்தினரால் சிமாட் வகுப்பறை ஒன்று கட்டி திறந்துவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு உடையார் கட்டு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையின் சிமாட்வகுப்பறை கட்டத்தினை வடமாகாண மகளீர்விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் திறந்துவைத்துள்ளார்.
இன்று 12-09-2017 காலை  பாடசாலை அதிபர் அமிர்தநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ் கல்வியற்கல்லூரியின் முதன்மை விரிவுரையாளர் வேலாயுதம் நந்தகுமாரும் முதன்மை விருந்தினராக  வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்  அவர்கள் கலந்துகொண்டு மற்றும் உடையார் கட்டு கேட்டக்கல்வி அதிகாரி சி.சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு உரைநிகழ்த்தியுள்ளார்.

Leave a comment