சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது.

140 0
சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று நண்பகல் கிளிநொச்சியை வந்தடைந்த சைட்டத்திற்கு எதிரான மக்கள் அணி வாகன தொடரணி கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மக்களை தெளிவூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு மக்களை தெளிவூட்டும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
இங்கு கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் மு.பா உறுப்பினர் சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் 3ம் இடத்தில் உள்ளது, முல்லைத்தீவு மாவட்டம் வறுமை மாவட்டத்தில் முதலாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இங்கிருந்து யாராலாயினும் 100 லட்சம் கொடுத்து கல்வி கற்று வைத்தியராக முடியுமா என குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து முருகண்டியை  சென்றடைந்த  வாகனப் பேரணி நாளை காலை வவுனியாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.

Leave a comment

Your email address will not be published.